தேனி: தேர்தல் கூட்டணி குறித்த முடிவை பண்ணையில் நடக்கும் கூட்டத்தை தொடர்ந்து சென்னையில் அறிவிப்பேன் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், அதிமுக – பாஜ கூட்டணி சிறு, சிறு கட்சிகளை பிடித்து ஆள் சேர்த்து வருகின்றனர். இந்நிலையில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழக தலைவரும், முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் அரசியலில் தனித்து விடப்பட்டதை போல, தன்னை யாரும் அழைக்கவில்லை என விரக்தியில் புலம்பும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். நேற்று காலை தேனி மாவட்டம், பெரியகுளத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து ஓ.பன்னீர்செல்வம், தனது தொகுதியான போடிக்கு புறப்பட்டு சென்றார். முன்னதாக வீட்டின் முன்பு நின்றிருந்த செய்தியாளர்களிடம், ‘‘பெரியகுளம் பண்ணை வீட்டில் ஆதரவு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நாளை(இன்று) நடைபெற உள்ளது. அந்த கூட்டம் முடிந்த பிறகு சென்னை செல்கிறேன். அங்கு எனது முடிவை அறிவிப்பேன்’’ என தெரிவித்து விட்டு காரில் புறப்பட்டுச் சென்றார்.
‘பண்ணையில கூடி சென்னையில அறிவிக்கிறோம்’ யாருடன் பாஸ் கூட்டணி? ஓபிஎஸ் ஓவர் சஸ்பென்ஸ்
- சென்னை
- பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி
- OPS
- பிறகு நான்
- ஓ. பன்னீர்செல்வம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- அய்யாட்மக்-
- பி.ஜே.பி கூட்டணி
