டெல்லி: தமிழ்நாடு ஆளுநரின் செயல்பாடு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என டி.ஆர்.பாலு எம்பி தெரிவித்துள்ளார். மேலும் ஆளுநர் உரையுடன் பேரவை கூட்டத்தொடர் தொடங்கும் மரபை நீக்க சட்டத்திருத்தம் கொண்டுவர வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை பழிவாங்கும் வகையில் ஒன்றிய அரசு செயல்பட்டு வருகிறது எனவும் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பல்வேறு முக்கிய பிரச்சனைகள் குறித்து விவாதிக்க வேண்டுமென வலியுறுத்தினோம். டெல்லியில் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு பிறகு டி.ஆர்.பாலு, திருச்சி சிவா ஆகியோர் பேட்டி அளித்தார். சட்டப்பேரவை கூடியபோது ஆளுநர் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தது குறித்து விவாதிக்க வேண்டும் என தெரிவித்தார். சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் வெளிநடப்பு செய்தது அரசியல் சாசன நடைமுறைகளுக்கு எதிரானது.
மீனவர்கள் தொடர் கைது, ஓசூர் விமான நிலைய அனுமதி விவகாரங்கள் குறித்து விவாதிக்குமாறு வலியுறுத்தினார். சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என அனைத்துக் கட்சி கூட்டத்தில் வலியுறுத்தினர். கச்சத்தீவு மீட்பது குறித்து உரிய முடிவு எடுப்பது குறித்து விவாதிக்க வேண்டும் எனவும், அமெரிக்க வரிவிதிப்பால் பல்வேறு துறைகளில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து விவாதிக்க வலியுறுத்தினார். மகாத்மா காந்தி 100 நாள் வேலை திட்டத்தின் பெயர் மாற்றப்பட்டதை திரும்பப்பெற வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தின் நிதியை மாநிலங்கள் மீது ஒன்றிய அரசு திணித்துள்ளது என கூறியுள்ளார்.
