டெல்லி: வரதட்சணைக் கொடுமை மரணங்களுக்கான தண்டனைக்கு ஈடாக, ஆசிட் வீச்சு குற்றத்திலும் தண்டனை வழங்க நாடாளுமன்றம், மாநில சட்ட மன்றங்களின் தலையீடு தேவை என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. ஆசிட் வீச்சு சம்பவங்கள், வழக்கின் நிலை, பாதிக்கப்பட்டோரின் கல்வி, வேலைவாய்ப்பு நிலை உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் நான்கு வாரங்களில் தாக்கல் செய்ய ஒன்றிய, மாநில அரசுகளுக்கும் உத்தரவு அளித்துள்ளது.
