திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயிலில் 7 நாள் தெப்பல் உற்சவம் தொடங்கியது

திருமலை: திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயிலில் 7 நாள் தெப்பல் உற்சவம் நேற்றிரவு தொடங்கியது. திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயிலில் வருடாந்திர 7 நாள் தெப்பல் உற்சவம் நேற்றிரவு தொடங்கியது. இதையொட்டி முதல் நாளான நேற்று கோதண்டராம சுவாமி, சீதா, லட்சுமணருடன் அலங்கரிக்கப்பட்ட தெப்பலில் 5 சுற்றுகள் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 2ம் நாளான இன்றிரவு ருக்மணி சத்தியபாமா சமேத பார்த்தசாரதி சுவாமி 5 சுற்றுகள் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். தொடர்ந்து 3ம் நாளான நாளை தேவி, பூதேவி சமேத கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி, 4ம் நாள் உற்சவத்தில் ஆண்டாள் சமேத கிருஷ்ணரும், கடைசி 3 நாள் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் கோவிந்தராஜ சுவாமியும் தெப்பலில் வலம் வந்து அருள்பாலிக்க உள்ளார்.

Related Stories: