கேப்டவுன்: தென்ஆப்ரிக்காவில் 4வது சீசன் எஸ்ஏ டி20 தொடர் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த 29வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், சன் ரைசர்ஸ் அணிகள் மோதின. முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் வான்டர்சன் 21 ரன்னிலும், ரிக்கல்டன் 2 ரன், கேப்டன் பூரன் 2 ரன், பொல்லார்ட் ரன் ஏதும் எடுக்காமலும் சன் ரைசர்சின் சவாலான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து அவுட் ஆகினர். அடுத்து லின்டேவுடன் ஜோடி சேர்ந்த ஹென்ட்ரிக்ஸ் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். லின்டே 30 ரன்னில் அவுட் ஆக, ஹென்ட்ரிக்ஸ் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 70 ரன்கள் சேர்க்க மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் முடில் 6 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் எடுத்தது.
149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன் ரைசர்ஸ் அணி களமிறங்கியது. துவக்க வீரர்களாக குயின்டன் டி காக், ஜானி பேர்ஸ்டோவ் ஆகியோர் களமிறங்கினர். போர்ஸ்டோவ் 10 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்த வந்த மேத்யூ ப்ரீட்ஸ்கே ஆகியோர் அதிரடியாக விளையாடி இருவரும் அரை சதம் அடித்தனர். இந்த ஜோடி 109 ரன்கள் சேர்ந்த நிலையில், குயிண்டன் டி காக் 56 ரன்னில் வெளியேறினார். சிறப்பாக ஆடிய ப்ரீட்ஸ்கே 66 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ஜோர்டான் ஹெர்மன் மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர். 19.5 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 149 ரன் எடுத்து சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்று குவாலியபர் 1-க்கு தகுதி பெற்றது. ஜோர்டான் ஹெர்மன் 12 ரன், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 1 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். 6வது தோல்வியை சந்தித்த மும்பை இந்தியன்ஸ், பட்டியலில் கடைசி இடம் பிடித்து வெளியேறியது.
