ராமநாதபுரம் மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் மூலம் 43,413 பேர் பயன்

ராமநாதபுரம், ஜன.9: ராமநாதபுரம் மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் மூலம் கடந்த ஆண்டு 43,413 பேர் பயனடைந்ததாக அந்த சேவையின் மாவட்ட மேளாளர் தமிழ்செல்வன் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறும்போது, ராமநாதபுரம் மாவட்டத்தில் மகப்பேறு மருத்துவம், பிரசவம், விபத்து, விஷம் அருந்தியவர்கள், கடுமையான வயிற்று வலி, ஒவ்வாமை, நாய்க்கடி, கால்நடைகள் தாக்குதல், தகராறில் காயமடைதல், இருதயம், ரத்த நாளங்கள் பாதிப்பு, நீரிழிவு நோய், காய்ச்சல், தொற்று, சுவாச பிரச்னை, வாகன விபத்தில் அதிர்ச்சி அடைதல், சுயநினைவு இல்லாமல் மயக்கம் உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் நோயாளிகள் 108 ஆம்புலன்ஸை பயன்படுத்தியுள்ளனர். கடந்த ஓராண்டில் விபத்தில் சிக்கியவர்கள் 7,330, கர்ப்பிணிகள் 14,643, இருதயம் பாதிப்பு உடையவர்கள் 2,656, சுவாசப் பிரச்னை உடையவர்கள் 1836, வாதப் பிரச்னை உடையவர்கள் 736, பச்சிளம் குழந்தைகள், தாய்மார்கள் 381 பேர் என மொத்தம் 43,413 பேர் 108 ஆம்புலன்ஸ் மூலம் பயன் பெற்றுள்ளனர் என தெரிவித்தார்.

Related Stories: