வடமாநில தொழிலாளர்களுக்கு நோய் தடுப்பு பரிசோதனை

தொண்டி, ஜன.9: நம்புதாளை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள வட மாநில தொழிலாளர்களுக்கு யானைக்கால் நோய் அறிகுறி உள்ளதா என்பதை கண்டறிய ரத்த பரிசோதனை நடைபெற்றது. தொண்டி, நம்புதாளை மற்றும் சுற்று வட்டார பகுதியில் ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் தங்கியுள்ளனர். மாவட்ட சுகாதார அலுவலர் அர்ஜுன் குமார் உத்தரவின் பெயரில், தொண்டி சுகாதார துறையினர் பரிசோதனைக்கு சென்றுள்ளனர்.ஆனால் வட மாநில தொழிலாளர்கள் போதிய ஒத்துழைப்பு தரவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து நேற்று தொண்டி போலீசாரின் துனையுடன் தொண்டி தெற்கு தோப்பு பகுதியில் 40க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்களுக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. வட்டார மருத்துவ அலுவலர் வைதேகி, சுகாதார ஆய்வாளர் சந்தானராஜ் உட்பட பலர் ஈடுபட்டனர். மேலும் நம்புதாளை, புதுப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் உள்ளவர்களுக்கும் விரைவில் ரத்த பரிசோதனை நடைபெறும் என்றனர்.

Related Stories: