காரைக்குடி, ஜன.9: காரைக்குடி அருகே கும்மங்குடி விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லூரியில் இயந்திரவியல், மின்னியல், மின்னணுவியல், கணிப்பொறியியல் மற்றும் மெக்கட்ராணின்ஸ் துறை மூன்றாமாண்டு மாணவர்களுக்கு வளாக நேர்காணல் நடத்தப்பட்டு பணிநியமன ஆணை வழங்கப்பட்டது. கல்லூரி முதல்வர் சசிகுமார் வரவேற்றார். விவேகானந்தா கல்விகுழும தலைவர் சொக்கலிங்கம் தலைமை வகித்து பணி நியமன ஆணைகளை வழங்கினார். தனியார் நிறுவன மனிதளவள மேம்பாட்டு அலுவலர் அருண்குமார், விக்டர் தேவ் ஆகியோர் வளாகத் தேர்வினை நடத்தினர். நேர்காணலில் பங்கு பெற்ற மாணவர்களில் 60 பேர் தேர்வு செய்யப்பட்டு உடனடியாக பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. அதேபோல் தனியார் நெட்ஒர்க் நிறுவனம் சார்பில் மனிதவள மேம்பாட்டு அலுவலர் தேஜா வளாகத்தேர்வு நடத்தி 64 மாணவர்களை தேர்வு செய்தார். இவர்களுக்கும் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது. மெக்கட்ராணிக்ஸ் துறை விரிவுரையாளர், வேலைவாய்ப்பு அலுவலர் அபினேஷ் ஒருங்கிணைத்தார். மெக்கட்ராணிக்ஸ் துறைத்தலைவர் சுபாகர் நன்றி கூறினார்.
