சர்வதேச சிலம்ப போட்டி வித்யாகிரி மாணவர் தேர்வு

காரைக்குடி, ஜன.9: பாண்டிச்சேரியில் தேசிய அளவிலான சிலம்ப போட்டி நடந்தது. இப்போட்டியில் காரைக்குடி அருகே புதுவயல்  வித்யாகிரி பள்ளி மாணவர் சிலம்ப போட்டியில் வெள்ளி பதக்கம் வென்று ஏப்ரலில் மலேசியாவில் நடக்கவுள்ள சர்வதேச அளவிலான சிலம்ப போட்டியில் விளையாட தேர்வு பெற்றுள்ளார். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளிகுழு தலைவர் கிருஷ்ணன், தாளாளர் டாக்டர் சுவாமிநாதன், பொருளாளர் முகம்மதுமீரா, பள்ளி முதல்வர் குமார் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

Related Stories: