நள்ளிரவில் ஆட்டோவில் சென்று கத்தியுடன் நடமாடும் இளைஞர்கள் வீடியோ வைரலால் பரபரப்பு கலசப்பாக்கம், துரிஞ்சாபுரம் ஒன்றியங்களில்

கலசப்பாக்கம், ஜன. 9: கலசப்பாக்கம், துரிஞ்சாபுரம் ஒன்றியங்களில் நள்ளிரவில் ஆட்டோவில் சென்று கையில் கத்தியுடன் நடமாடும் இளைஞர்களின் வீடியோ வைரலானதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் கடலாடி காவல் நிலையத்துக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் நள்ளிரவு நேரங்களில் இளைஞர்கள் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதாக வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 1.25 மணியளவில் துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் ஒரு கிராமத்தில் இளைஞர் ஒருவர் வருவதும் ஆட்டோவில் 3 இளைஞர்கள் கத்தியுடன் சுற்றுவதும் வீடியோ வைரலாக பரவி வருகிறது.

இரவு நேரங்களில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் பல்வேறு கிராமங்களில் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளது. இருப்பினும் பொங்கல் திருநாள் சில தினங்களில் உள்ள நிலையில் சமூக விரோதிகள் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் இடத்தில் நடப்பது போன்ற வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து போலீசார் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: