டெல்லி : அதானி பவர் நிறுவனம் விநியோகிக்கும் மின்சாரத்துக்கு சுங்கவரி கட்ட வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம். சிறப்பு பொருளாதார மண்டலத்தில் உற்பத்தி செய்து விநியோகிக்கப்படும் மின்சாரத்துக்கு வரி விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதானி பவர் நிறுவனம் சுங்கவரி கட்ட வேண்டும் என்று 2019ல் குஜராத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதானி பவர் நிறுவனத்திடம் வசூலிக்கப்பட்ட வரியை 8 வாரத்தில் திரும்ப வழங்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
