புதுடெல்லி: திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் டெரிக்.ஓ.பிரைன் உச்ச நீதிமன்றதில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில்,‘‘மேற்குவங்க மாநிலத்தில் எஸ்.ஐ.ஆர் நடைமுறைகளில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தன்னிச்சையான முறையில் செயல்பட்டு வருகிறது.
தேர்தல் முகவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலமாகவும், வாய் மொழியாகவும் புதுப்புது உத்தரவுகள் என்பது பிறப்பிக்கப்பட்டு வருகிறது. சரியான காரணம் இல்லாமல் ஆயிரக்கணக்கானவர்கள் தன்னிச்சையாக நீக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே 1.36 கோடி வாக்காளர்கள் மேற்குவங்க மாநில வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான காரணத்தையும் தேர்தல் ஆணையம் தர மறுக்கிறது. எனவே இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு ஒரு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
