உரிமையாளர், 8 ஆடுகள் வாகனம் மோதி சாவு

மானாமதுரை ஜன.3: மானாமதுரை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி 8 ஆடுகளுடன் உரிமையாளர் உயிரிழந்தார். திருச்சுழி தாலுகா கிளவிகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி மகன் குமார்(38). இவர் மானாமதுரை அருகே உருளி கிராமத்தில் உள்ள வயலில் தங்கி ஆட்டுக்கிடை போட்டு வளர்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு சொந்த ஊரான கிளவிகுளம் கிராமத்திற்கு சிவகங்கை மானாமதுரை மெயின்ரோட்டில் தனது ஆடுகளுடன் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் சம்பவ இடத்திலேயே குமார் பலியானார். அவருடன் சென்ற 8 ஆடுகளும் உடல் சிதறி சாலையில் இறந்து கிடந்தன. தகவல் அறிந்த சிப்காட் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

Related Stories: