சதுரகிரி கோயிலில் ரூ.16 லட்சம் காணிக்கை வசூல்

வத்திராயிருப்பு, ஜன.3: சதுரகிரி கோயிலில் ரூ.16 லட்சம் உண்டியல் காணிக்கை வசூலாகி இருந்தது.
வத்திராயிருப்பு அருகே மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் மற்றும் சந்தன மகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. சுந்தரமகாலிங்க சுவாமி திருக்கோயில் உண்டியல்கள் டிச.29, 30ம் தேதி திறந்து எண்ணப்பட்டன.

இதில் ரொக்கமாக ரூ.14,52,593 மற்றும் தங்கம் 8 கிராம், வெள்ளி 28.890 கிராம் கிடைக்கப்பெற்றது. டிச.31 அன்று சந்தனமகாலிங்கம் சுவாமி கோயில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. இதில் ரூ.1,45,791 கிடைக்கப்பெற்றது.

இந்த உண்டியல் எண்ணும் பணியில் சிறப்பு அலுவலராக விருதுநகர் மாவட்ட இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர்கள், பரம்பரை அறங்காவலர், திருக்கோயில் செயல் அலுவலர் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் தன்னார்வர்களாக ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரி மாணவர்கள் சுமார் 32 பேர் கலந்து கொண்டனர்.

 

Related Stories: