திருப்பூர், ஜன. 3: திருப்பூர் மாநகராட்சி பகுதியில் குப்பை சேகரிக்கும் பணிக்காக 50 புதிய பேட்டரி வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளது. மாநகராட்சி மைய அலுவலகத்தில் இந்த வாகனங்களை, மேயர் தினேஷ்குமார் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், 2வது மண்டல தலைவர் கோவிந்தராஜ், சுகாதார குழு தலைவர் கவிதா நேதாஜி கண்ணன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்துகொண்டனர். குப்பை சேகரிக்கும் பணிக்கு தேவைக்கு ஏற்ப கூடுதல் வாகனங்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என மேயர் தெரிவித்தார்.
