பாலக்காடு அருகே பானப்பரம்பு கோயிலில் மெகா திருவாதிரை நடனம்: 300க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்

பாலக்காடு, ஜன. 3: பாலக்காடு அருகே ஆனிக்கோடு பானப்பரம்பு கோயில் மைதானத்தில் திருவாதிரை திருவிழாவை முன்னிட்டு மெகா திருவாதிரை நடனம் நேற்று மாலை நடைபெற்றது. 300க்கும் மேற்பட்ட பெண்கள் கசவு சேலைகள் அணிந்து திருவாதிரை நடனப்பாடலுடன் ஆடி மக்களை பரவசமடைய செய்தனர்.  இந்நிகழ்ச்சியை பாலக்காடு எம்.பி வி.கே. ஸ்ரீகண்டன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

சிறப்பு விருந்தினராக மலபார் தேவஸ்தான சேர்மன் தண்டபானி கலந்து கொண்டார். நேற்று மாலை பூடூர் பானப்பரம்பு கோவில் மைதானத்தில் திருவாதிரை நடனம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை பார்க்க பாலக்காடு மாவட்டத்தின் சுற்றுவட்டார பகுதி மக்கள் திரண்டிருந்தனர். இதற்கான ஏற்பாடுகளை டிரஸ்ட் தலைவர் லதிகா, செயலாளர் பிரமீளா, கலைக்குழு ஆசிரியை பபிதா மற்றும் ஆஷா டீச்சர் ஆகியோர் செய்திருந்தனர்.

 

Related Stories: