பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு தந்தவர் கைது

விருதுநகர், ஜன.3: விருதுநகர் அருகே வீட்டில் தனியாக இருந்த 7ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். விருதுநகர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமி அரசு உயர் நிலைப்பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார். அரையாண்டுத் தேர்வு விடுமுறை என்பதால் வீட்டில் இருந்துள்ளார்.

பெற்றோர் வேலைக்குச் சென்று விட்டதால் சிறுமி மட்டும் தனியாக வீட்டில் இருந்துள்ளார். இதை அறிந்த அதே பகுதியை சேர்ந்த வேல்முருகன் என்பவர் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். அவரது தந்தையின்
ஆதார் அட்டையை கேட்பது போல் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

இந்நிலையில், வேல்முருகனிடம் இருந்து சிறுமி தப்பியோடி அருகில் உள்ள வீட்டிற்குள் சென்றுவிட்டாராம். பின்பு, நடந்தவற்றை தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, விருதுநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் தாயார் புகார் செய்தார். அதன்பேரில், வேல்முருகனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.

 

Related Stories: