உசிலம்பட்டி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையின் ஆக்கிரமிப்புகள் அகற்றம்: பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அதிரடி

உசிலம்பட்டி, ஜன. 3: உசிலம்பட்டியில் மதுரை – தேனி தேசிய நெடுஞ்சாலையில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. உசிலம்பட்டியில் உள்ள மதுரை – தேனி தேசிய நெடுஞ்சாலையில், 100க்கும் மேற்பட்ட கடைகளின் முன்பகுதி ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தது. இவற்றை அகற்ற வேண்டும் என்று அதிகாரிகள் உத்தரவிட்டும், கடைகளின் உரிமையாளர்கள் அதற்கான பணிகளை மேற்கொள்ளவில்லை.

இதையடுத்து உசிலம்பட்டி டிஆர்ஓ உட்கர்ஷ் குமார் தலைமையில் தாசில்தார் பாலகிருஷ்ணன், டிஎஸ்பி சந்திரசேகரன், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப் பொறியாளர் சீதாராமன் ஆகியோர் முன்னிலையில், இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்றது.

இந்த பணிகள் மேலும் சில நாட்கள் தொடரும் என்றும், அகற்றப்பட்ட இடங்களில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் உருவானால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

 

Related Stories: