சாயல்குடி மாரியூரில் 1008 திருவிளக்கு பூஜை

சாயல்குடி, ஜன. 3: சாயல்குடி அருகே மாரியூர் பவளநிறவள்ளியம்மன் உடனுறை பூவேந்தியநாதர் கோயிலில் வருடாந்திர மார்கழி மாத உற்சவ திருவிழா கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. நேற்று கோயில் அருகேயுள்ள கடலில் உற்சவ மூர்த்தி, அம்பாளுக்கு தீர்த்தவாரியும், அதை தொடர்ந்து பூவேந்தியநாதருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபராதனைகள் நடந்தன. பின்னர் உற்சன அம்பாள், சுவாமிக்கு பொன்னூஞ்சல் தாலாட்டு நடந்தது. தொடர்ந்து மாலையில் உலக நன்மை வேண்டி 1008 திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். இரவில் ஆன்மீக சொற்பொழிவு, பஜனைகள் நடந்தன. இதில் கடலாடி, சாயல்குடி, கமுதி, பரமக்குடி, முதுகுளத்தூர், பரமக்குடி மற்றும் மாவட்டத்தின் அனைத்து பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Related Stories: