வேலூர், ஜன.3: வேலூர் ஆட்டுதொட்டி அருகே கழுத்தில் காயங்களுடன் தொழிலாளியின் சடலத்தை மீட்டு கொலை செய்யப்பட்டாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் காகிதப்பட்டறை தலையாரி மணியம் வீதியை சேர்ந்தவர் முருகன்(48), கூலித்தொழிலாளி. இவர் கடந்த 30ம் தேதி மாலை வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் முருகன், வேலூர் அம்பேத்கர் நகர் ஆட்டுத்தொட்டி அருகே கழுத்தில் தசைநார் கீறல்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இவர் எப்படி இங்கு வந்தார்? தகராறில் கழுத்து இறுக்கி கொல்லப்பட்டாரா? என்பது தெரியவில்லை. இதுதொடர்பாக முருகன் மகன் சிட்டிபாபு கொடுத்த புகாரின் பேரில் வேலூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
