பழுதுபார்க்க நிறுத்திய லாரி தீயில் எரிந்து சாம்பல் வேலூரில் மெக்கானிக் ஷெட் முன்பு

ேவலூர், ஜன.3: வேலூரில் மெக்கானிக் ஷெட் முன்பு நிறுத்தி வைத்திருந்த லாரி நள்ளிரவு திடீரென தீயில் சிக்கி சாம்பலானது. வேலூர் பழைய பை பாஸ் சாலையில் இயங்கி வரும் மெக்கானிக் ஷெட் முன்பு, பழுது பார்ப்பதற்காக லாரி ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணியளவில் அந்த லாரியின் ஒரு பக்கம் தீப்பிடித்து மளமளவென முழுவதுமாக பற்றி எரிந்தது. அப்போது அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து வேலூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த வேலூர் தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். ஆனாலும், பழுதான லாரி முழுமையாக எரிந்து சாம்பலானது. இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசார் லாரிக்கு மர்ம நபர்கள் யாராவது தீ வைத்தனரா? எப்படி எரிந்தது என்று அப்பகுதி சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: