ஆப்கோன் கால்பந்து ஜோராக வென்ற மொராக்கோ: நாக்அவுட் சுற்றில் நுழைந்து அசத்தல்

ரபாட்: ஆப்கோன் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் மொராக்கோ அணி, ஜாம்பியாவை 3-0 என்ற கோல் கணக்கில் அட்டகாசமாக வென்று நாக்அவுட் சுற்றில் நுழைந்தது. ஆப்ரிக்க நாடுகள் பங்கேற்கும் ஆப்கோன் கால்பந்து போட்டிகள், மொராக்கோ நாட்டின் தலைநகர் ரபாட்டில் நடந்து வருகின்றன. நேற்று நடந்த போட்டியில் மொராக்கோ – ஜாம்பியா நாடுகள் மோதின.

போட்டியின் துவக்கம் முதல் மொராக்கோ வீரர்கள் பம்பரமாக சுழன்றாடி கோல்கள் போடுவதில் முனைப்பு காட்டினர். போட்டியின் 9வது நிமிடத்தில் மொராக்கோ அணியின் அயோப் எல் காபி தனது அணிக்காக முதல் கோல் போட்டு அசத்தினார். அதன் பின், 27வது நிமிடத்தில் மொராக்கோ வீரர் பிராஹிம் தியாஸ் அணியின் 2வது கோல் போட்டு அணியை வலுவான நிலைக்கு கொண்டு சென்றார்.

அதன் பின்பும், மொராக்கோ வீரர்களின் வேகம் குறையவில்லை. போட்டியின் 50வது நிமிடத்தில் அயோப் மீண்டும் கோல் போட்டு கரவொலி பெற்றார். அதேசமயம் போட்டி முடியும் வரை ஜாம்பியா வீரர்களால் கோல் எதுவும் போட முடியவில்லை. அதனால், 3-0 என்ற கோல் கணக்கில் மொராக்கோ அணி வெற்றி வாகை சூடியது. இதன் மூலம், நாக் அவுட் சுற்றுக்குள் அந்த அணி நுழைந்தது.

Related Stories: