சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதிமுகவில் விருப்பமனு விநியோகம் டிச.31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதிமுகவினரின் கோரிக்கையை ஏற்று டிச.31ம் தேதி மாலை 5 மணி வரை விருப்ப மனு பெறும் கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்படுகிறது.
