ஸ்டாலின் இருக்கும் வரை திமுக ஆட்சி இருக்கும் வரை மதவெறி ஆட்டத்துக்கு இடம் கிடையாது: முதலமைச்சர் பேச்சு

கள்ளக்குறிச்சி: ஸ்டாலின் இருக்கும் வரை திமுக ஆட்சி இருக்கும் வரை மதவெறி ஆட்டத்துக்கு இடம் கிடையாது. தமிழ்நாட்டில் கிறிஸ்துமஸ், ரம்ஜான் நாட்களில் கேக், பிரியாணி எங்கே என்று மக்கள் உரிமையுடன் கேட்கின்றனர். மதுரை சித்திரை திருவிழாவுக்கு வரக்கூடியவர்களுக்கு இஸ்லாமியர்கள் ரோஸ் மில்க் கொடுக்கிறார்கள். தை முதல்நாளன்று தேவாலயத்தில் பொங்கல் வைத்து படைக்கிறார்கள். திருப்பரங்குன்றம் தர்கா கொடியை முருக பக்தர்கள் வணங்குகிறார்கள். எம்மதமும் சம்மதம் என்ற தமிழ்நாட்டு மக்களின் ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கம்தான் பாஜக கண்களை உறுத்துகிறது’ என கள்ளக்குறிச்சியில் முதலமைச்சர் உரையாற்றினார்.

Related Stories: