கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சிக்கு 8 புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். ரூ.18 கோடியில் உளுந்தூர்பேட்டை அரசு கலைக் கல்லூரிக்கு புதிய கட்டிடம் அமைக்கப்படும். உளுந்தூர்பேட்டை வட்டத்தில் 50 ஏக்கர் பரப்பளவில் புதிய சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும். சிப்காட் தொழிற்பேட்டை ரூ.10 கோடியில் அமைக்கப்படும். புதுப்பாலப்பட்டி கிராமத்தில் ரூ.18 கோடியில் துணை மின் நிலையம் அமைக்கப்படும். சின்னசேலம் வட்டத்தில் ரூ.3.9 கோடியில் புதிய தீயணைப்புத்துறை கட்டடம் கட்டப்படும். கல்வராயன்மலை பகுதியில் மகளிர் விடியல் பயணம் திட்டம் விரிவுபடுத்தப்படும். 120 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த நீதிமன்றம், குடியிருப்புகள் அமைக்கப்படும் போன்ற 8 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
கள்ளக்குறிச்சிக்கு 8 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- முதல் அமைச்சர்
- சட்டமன்ற உறுப்பினர்
- கள்ளக்குறிச்சி
- கே. ஸ்டாலின்
- ஸ்டாலின்
- உளுந்தர்பேட் மாநில கலை கல்லூரி
- சிப்காட் இண்டஸ்ட்ரியல்
- அந்தூர்பெட்
- Chipcat
