சேலம்: பாமக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்திற்கு பாதுகாப்பு வழங்க கோரி ராமதாஸ் தரப்பினர் மனு அளித்தார். வரும் 29 ஆம் தேதி சேலத்தில் ராமதாஸ் தலைமையில் சிறப்பு செயற்குழு, பொதுக்குழு நடைபெறவுள்ளது. அன்புமணி ஆதரவாளர்களால் அச்சுறுத்தல் இருப்பதாக சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். கோர்ட் உத்தரவைமீறி பொய் புகார் கொடுத்த அன்புமணி, ஆதரவாளர்கள்மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
