சென்னை : பறவைகளிடமிருந்து மனிதருக்கு தற்போதுவரை பறவை காய்ச்சல் பரவவில்லை என்று தமிழக சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது. பறவை காய்ச்சலுக்கான டானிக் ப்ளூ தடுப்பு மருந்து, அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கையிருப்பில் உள்ளது என்றும் கோழி, சேவல், கொக்கு, நாரை, புறா,வாத்து உள்ளிட்ட உணவு பறவைகளிலிருந்து பரவ வாய்ப்பு உள்ளது என்றும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
