பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக அன்புமணி தரப்பு தலைமை நிலையம் அறிவிப்பு!!

சென்னை: பாமகவில் இருந்து பென்னாகரம் தொகுதி எம்.எல்.ஏ. ஜி.கே.மணி நீக்கப்படுவதாக அன்புமணி தரப்பு அறிவித்துள்ளது. கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதால் ஒழுங்கு நடவடிக்கை குழு பரிந்துரைப்படி ஜி.கே.மணி நீக்கப்படுவதாக அன்புமணி தரப்பு பாமக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீக்கப்பட்ட ஜி.கே.மணியுடன் பாமகவினர் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளவேண்டாம் எனவும், பாமக நலனுக்கும் கட்சி தலைமைக்கும் எதிராக செயல்பட்டதால் ஜி.கே.மணி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்புமணி தரப்புடன் எந்த கட்சியும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது என்று காலையில் ராமதாஸ் தரப்பு எச்சரித்திருந்தது.

Related Stories: