வத்தலக்குண்டு அருகே பலசரக்கு கடையில் பணம் திருட்டு

வத்தலக்குண்டு, டிச. 19: வத்தலக்குண்டு அருகே ஜி.தும்மலப்பட்டியை சேர்ந்தவர் முகமது அசாருதீன். (25). இவர் கோபாலசாமி கோயில் செல்லும் சாலையில் பலசரக்கு கடை வைத்துள்ளார். நேற்று காலை கடையை திறக்க சென்ற போது பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். தொடர்ந்து உள்ளே சென்று கல்லாவை பார்த்த போது அதிலிருந்த ரூ.60 ஆயிரம் பணம் மற்றும் பலசரக்கு பொருட்களை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து முகமது அசாருதீன் வத்தலக்குண்டு போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் எஸ்ஐ பாண்டியராஜன் மற்றும் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

Related Stories: