ஓசூர், டிச.20: ஓசூரில், காங்கிரஸ் சார்பில் ஒன்றிய பாஜ அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. ஓசூர் ராம் நகரில், காங்கிரஸ் சார்பில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில், மகாத்மா காந்தி பெயரை நீக்கிய ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிறுபான்மை மாநிலத் துணைத் தலைவர் சாதிக் கான் தலைமை வகித்து பேசினார்.மாமன்ற உறுப்பினர் பாக்கியலட்சுமி, இந்திராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஒன்றிய அரசை கண்டித்து ேகாஷமிட்டனர்.
