ஓமலூர், டிச.20: ஓமலூர் அருகே தீவட்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் விஜயராகவன்(22). இவர், கல்லூரி படிப்பை முடித்து விட்டு, ஜெராக்ஸ் மிஷின் சர்வீஸ் செய்யும் தனியார் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். அதேபோல், பூசாரிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மௌனிகா(20). இவர், சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வருகிறார். இவர்கள், கடந்த 2 வருடமாக காதலித்து வந்தனர். இந்நிலையில், நேற்று காலை வழக்கம்போல் வீட்டிலிருந்து புறப்பட்ட மௌனிகா, திருச்செங்கோடு சிவன் கோயிலுக்கு சென்று விஜயராகவனை திருமணம் செய்து கொண்டார். பின்னர், பாதுகாப்பு கேட்டு ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். இதையடுத்து ஓமலூர் மகளிர் போலீசார் இருதரப்பு பெற்றோருக்கும் தகவல் தெரிவித்தனர். ஆனால், விஜயராகவனின் பெற்றோர் ஸ்டேஷனுக்கு வரவில்லை. மௌனிகாவின் பெற்றோர் வந்த நிலையில், மௌனிகா 3 மாதம் கர்ப்பமாக இருப்பதாக கூறியதால் திடுக்கிட்டனர். தொடர்ந்து மௌனிகாவும் -தங்களுக்கும் எந்த தொடர்பும் கிடையாது என்று கூறிவிட்டு சென்றனர். இதையடுத்து, மௌனிகாவை விஜயராகவனுடன் போலீசார் அனுப்பி வைத்தனர்.
