பெரம்பூர், டிச.20: சென்னை திருவிக நகர் பகுதியில் போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புளியந்தோப்பு சரக துணை கமிஷனர் முத்துக்குமாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், செம்பியம் உதவி கமிஷனர் பசுபதி, திருவிக நகர் இன்ஸ்பெக்டர் கிருபாநிதி தலைமையிலான போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தினர். அதன் அடிப்படையில், அயனாவரம் பாலையக்கார தெருவை சேர்ந்த சாய் தீபக் (25) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 24 கிராம் மெத்தாம்பெட்டமின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில், இவர் பெங்களூருவில் இருந்து ஒருவரிடம் மெத்தாம்பெட்டமின் வாங்கி, அதை வாட்ஸ்அப் கால் மூலம் பலருக்கு ஒரு கிராம் 1500 ரூபாய் வீதம் விற்றது தெரிந்தது. அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இவருக்கு போதை பொருட்களை தொடர்ந்து சப்ளை செய்து வரும் பெங்களூருவை சேர்ந்த நபர்கள் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மெத்தாம்பெட்டமின் விற்றவர் சிக்கினார்
- பெரம்பூர்
- புலியந்தோப்பு
- சரக்கு
- துணை ஆணையாளர்
- முத்துக்குமார்
- திருவிக்கா நகர்
- சென்னை
- செம்பியம்
- உதவி ஆணையாளர்
- பசுபதி
- திருவிகா
- நகர்
- இன்ஸ்பெக்டர்
- கிருபாநிதி
