ஓமலூர் பேரூராட்சியில் குடிநீர், கழிவுநீர் கால்வாய் பணிகள்

ஓமலூர், டிச.20: ஓமலூர் பேரூராட்சி முதல் வார்டில் கழிவுநீர் கால்வாய் மற்றும் குடிநீர் குழாய் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர். இதையடுத்து ஓமலூர் பேரூராட்சி தலைவர் செல்வராணி ரவிச்சந்திரன் நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும், கழிவுநீர் கால்வாய் அமைப்பாதற்கான பணிகளை மேற்கொள்ள அளவீடு செய்யப்பட்டது. குடிநீர் குழாய் மாற்றி அமைக்க வார்டு மக்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டது. தொடர்ந்து பணிகள் துவங்கி நடந்து வருகிறது.

Related Stories: