நைனாமலை அடிவாரம் ஆஞ்சநேயர் கோயிலில் ஜெயந்தி விழா

சேந்தமங்கலம், டிச.20: புதுச்சத்திரம் ஒன்றியம் மின்னாம்பள்ளி ஊராட்சியில் பிரசித்தி பெற்ற நைனாமலை வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. மலையடிவார பாத மண்டபத்தில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. புரட்டாசி உள்ளிட்ட திருவிழா நாட்களில் மலையேறி வரதராஜ பெருமாளை சாமி தரிசனம் செய்ய முடியாதவர்கள், பாத மண்டபத்தில் உள்ள ஆஞ்சநேயரை வணங்கி செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். நேற்று அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, சுவாமிக்கு 12 வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு, வெண்ணை காப்பு சிறப்பு அலங்காரத்தில் பூஜைகள் நடந்தது. இதில் புதன்சந்தை, மின்னாம்பள்ளி, சேந்தமங்கலம், காளப்பநாயக்கன்பட்டி, செல்லப்பம்பட்டி, பொட்டணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

Related Stories: