விருதுநகர்: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில், விருதுநகர் கலைஞர் பகுதி மக்கள் சாலை வசதி ஏற்படுத்தி தர கோரி மனு அளித்தனர். அந்த மனுவில், பாவாலி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கலைஞர் நகர், மேட்டுப்பட்டி பகுதியில் சுமார் 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். பள்ளி குழந்தைகள், முதியோர் உள்ளிட்ட மக்கள் வசிக்கும் பகுதியில் அங்கன்வாடி, ரேசன்கடை, தெருவிளக்குகள், சாலை வசதி இல்லை. அடிப்படை வசதியின்றி ரேசன்கடை, அங்கன்வாடி மையத்திற்கு வடலைக்குறிச்சி முக்குரோடு நான்கு வழிச்சாலையை கடந்து செல்ல வேண்டி உள்ளது. நான்குவழிச்சாலையை கடக்கும் போது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சாலை விபத்துக்களில் சிக்கி இறந்துள்ளனர். இது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து சாலை விபத்துக்களை தவிர்க்கும் வகையில் அங்கன்வாடி மையம், ரேசன்கடை, தெருவிளக்குகள், சாலை வசதி செய்து தர வேண்டுமென தெரிவித்துள்ளனர்.
