திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட வாசல் தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு விரிவான ஏற்பாடு

திருமலை:திருமலையில் உள்ள யாத்திரிகள் சமுதாயக் கூடத்தை அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு அதிகாரிகளுடன் சேர்ந்து நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி டிசம்பர் 30ம் தேதி முதல் ஜனவரி 8ம் தேதி வரை பக்தர்கள் வைகுண்ட துவாரம் வழியாக தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர்.

முதல் 3 நாட்களுக்கு இலவச தரிசனத்தில் குலுக்கல் மூலம் பக்தர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. இந்த டோக்கன் உள்ளவர்கள் மட்டுமே சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். மீதமுள்ள 7 நாட்களுக்கு, டோக்கன் இல்லாவிட்டாலும் இலவச தரிசனத்தில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும். பக்தர்கள் எந்த சிரமத்தையும் சந்திக்காதபடி அனைத்து விதமான உள்கட்டமைப்பில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்றார்.

Related Stories: