வாக்கு திருட்டு குற்றச்சாட்டால் எதிர்க்கட்சிகள் தேர்தலில் தோல்விகளை சந்திக்கும்: தேவகவுடா எச்சரிக்கை

புதுடெல்லி: மாநிலங்களவையில் தேர்தல் சீர்த்திருத்தம் தொடர்பான விவாதம் நேற்று தொடர்ந்தது.

இதில், முன்னாள் பிரதமரும், மஜத கட்சி தலைவருமான தேவகவுடா பங்கேற்று பேசியதாவது:
வாக்கு திருட்டு குறித்து பிரதமர் மோடி தலைமை மீது குற்றம்சாட்டி, வாக்காளர்களின் மனதில் சந்தேகத்தை ஏற்படுத்துவதன் மூலம் எதிர்க்கட்சிகள் என்ன சாதிக்கப் போகின்றன? அவர்கள் தங்களை திருத்திக் கொள்ள வேண்டும். வாக்கு திருட்டு என்ற வார்த்தையை பயன்படுத்துவதன் மூலம் வரும் நாட்களில் எதிர்க்கட்சிகளை சேர்ந்த நண்பர்கள்தான் பாதிக்கப்பட போகிறீர்கள். நீங்கள் இந்த போரில் வெற்றி பெறப் போவதில்லை.

இதை ஏன் சொல்கிறேன் என்றால், நேரு காலத்திலும் தேர்தல் முறையில் சில குறைபாடுகள் இருந்தன. வாக்காளர் பட்டியல் குளறுபடிகள் குறித்த பிரச்னையை எழுப்பிய போதிலும், சமீபத்திய பீகார் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியை சந்தித்தது. உங்களுக்கு வெறும் 6 எம்எல்ஏக்கள் மட்டுமே கிடைத்தனர்.

வாக்காளர் பட்டியல் குளறுபடி விவகாரத்தில் பிரதமர் மீது எதிர்க்கட்சி குற்றச்சாட்டுவது ஏன்? அதற்கு தேர்தல் ஆணையம் உள்ளது. உச்ச நீதிமன்றம் உள்ளது. இந்த விஷயங்களை சரி செய்யுமாறு அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளுக்கும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மோடி ஆட்சி மீது மக்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. அடுத்த மக்களவை தேர்தலுக்கு பிறகும் மீண்டும் பாஜ ஆட்சி அமைக்கும் என்றார்.

Related Stories: