×

குவாரி அதிபருடன் இளம்பெண் உல்லாசம் 48ஆபாச வீடியோக்களை கணவருக்கு அனுப்பி மிரட்டல்:மார்த்தாண்டத்தில் 3 பேர் மீது வழக்கு

மார்த்தாண்டம்: குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே காஞ்சிரக்கோடு மேல்பம்மம் பகுதியை சேர்ந்தவர் 29 வயது இளம்பெண். அவரது கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இளம்பெண்னின் உறவினர் மருதூர்குறிச்சி வாள்வச்சகோஷ்டம் பகுதியை சேர்ந்தவர் பிரான்சிஸ் (46). இவர் நெல்லை மாவட்டத்தில் கல்குவாரி நடத்தி வருகிறார். இங்குதான் இளம்பெண் பணிபுரிந்து வந்தார்.

அப்போது பிரான்சிசும், இளம்பெண்ணும் நெருங்கி பழகியுள்ளனர். பிரான்சிஸ் தனது கெஸ்ட் ஹவுசுக்கு இளம்பெண்ணை அடிக்கடி அழைத்து சென்று ஒன்றாக இருந்துள்ளார். மேலும் அதனை வீடியோ பதிவு செய்து வைத்திருந்தார். இந்தநிலையில் பிரான்சிசும், இளம்பெண்ணும் இணைந்து புதிய தொழில் தொடங்க முடிவெடுத்தனர். இதற்கு முதலீடாக ₹3 லட்சம் பணம், 5 பவுன் நகையை இளம்பெண் பிரான்சிசுக்கு கொடுத்தாராம். புதிய தொழில் நன்றாக சென்ற நிலையில், அதில் கிடைத்த வருமானத்தை பிரான்சிஸ் இளம்பெண்ணுக்கு கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார். இதனை அறிந்த இளம்பெண் தன்னுடைய பணம், நகையை திருப்பி தருமாறு கேட்டார்.

அதற்கு பிரான்சிஸ், நீ எனது குவாரியில் பணிபுரியும் சிராயன்குழியை சேர்ந்த ராபின் (35) என்பவரின் வீட்டுக்கு வா… அங்கு வைத்து பேசிக்கொள்ளலாம் என்று அழைத்துள்ளார். இதனை நம்பிய இளம்பெண்ணும் அங்கு சென்றார். ஆனால் அங்கிருந்த ராபின், நீயும் பிரான்சிசும் உல்லாசமாக இருந்த 48 ஆபாச வீடியோ காட்சிகள் என்னிடம் உள்ளது.

எனவே பிரான்சிசுடன் நீ எப்படி இருந்தாயோ அதேபோல என்னுடனும் இருக்க வேண்டுமென கூறினாராம். அதிர்ச்சியடைந்த இளம்பெண் மறுத்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். பிரான்சிஸ் மனைவி வனஜகுமாரியும் (45) உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது. வனஜகுமாரி கணவர் பிரான்சிசுடன் இளம்பெண் உல்லாசமாக இருந்த வீடியோவை வெளிநாட்டில் இருக்கும் பெண்ணின் கணவருக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பி வைத்துள்ளார்.

அவர் உடனே ஊருக்கு புறப்பட்டு வந்துள்ளார். மேலும் இதுகுறித்து கேட்டு மனைவியை தாக்கியுள்ளார். கணவருக்கு விஷயம் தெரிந்ததால் நொந்துபோன இளம்பெண், பிரான்சிஸ், வனஜகுமாரி, ராபின் ஆகியோரை சந்தித்து ஏன் இப்படி நடந்துகொள்கிறீர்கள் என்று கேட்டுள்ளார். உடனே ராபின், இளம்பெண்ணின் கையை பிடித்து இழுத்து தவறாக நடக்க முயன்றாராம். அங்கிருந்து தப்பித்த இளம்பெண் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதுகுறித்து பிரான்சிஸ், வனஜகுமாரி, ராபின் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post குவாரி அதிபருடன் இளம்பெண் உல்லாசம் 48ஆபாச வீடியோக்களை கணவருக்கு அனுப்பி மிரட்டல்:மார்த்தாண்டத்தில் 3 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Marthananda ,MARTHANDAM ,KANCHIRAKKODU MELBAMMAM AREA ,NEAR KUMARI ,Francis ,Maraudurkurichi Swordskochodam ,Nella district ,Kalguari ,
× RELATED குப்பையை எரித்தபோது கடையில் விழுந்த...