×

ரூ.2 கோடி மதிப்பிலான அம்பர்கிரீஸ் பறிமுதல்: பைக்கில் கடத்தி வந்த 2 பேர் தப்பி ஓட்டம்

ஆரல்வாய்மொழி: ஆரல்வாய்மொழி அருகே போலீஸ் வாகன சோதனையில் ரூ.2 கோடி மதிப்பிலான அம்பர்கிரீசை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். பைக்கில் கடத்தி வந்த 2 பேர் தப்பி ஓடி விட்டனர். குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி போலீசார் சகாயநகர் விலக்கு – லாயம் சாலையில் ஸ்ரீகுமார் நகர் அருகே வாகன சோதனையில் இருந்தனர். அப்போது அந்த வழியாக செண்பகராமன்புதூரில் இருந்து சகாயநகர் விலக்கு நோக்கி நம்பர் பிளேட் இல்லாத பைக்கில் 2 பேர் வந்தனர். போலீசாரை பார்த்ததும், பைக்கை திருப்பி தப்பி செல்ல முயன்றனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை துரத்தினர்.

ஆனால் பைக்கை நிறுத்தாமல், அவர்கள் வேகமாக சென்றனர். அப்போது பின்னால் இருந்த நபர், ஒரு சாக்கு மூடையை சாலையின் ஓரத்தில் தூக்கி எறிந்தார். அதை போலீசார் கைப்பற்றி சோதனை செய்தனர். அதில் அம்பர்கிரீஸ் (திமிங்கலத்தின் எச்சம்) இருந்தது தெரிய வந்தது. கைப்பற்றப்பட்ட அம்பர்கிரீசை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அது மொத்தம் 5.6 கிலோ எடை இருந்தது. இதன் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.2 கோடிக்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள வனத்துறையினர், தப்பிய இரண்டு பேர் யார்? என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

The post ரூ.2 கோடி மதிப்பிலான அம்பர்கிரீஸ் பறிமுதல்: பைக்கில் கடத்தி வந்த 2 பேர் தப்பி ஓட்டம் appeared first on Dinakaran.

Tags : Aralvaimozhi ,ambergris ,Kumari district ,Sagayanagar ,Layam road… ,
× RELATED கற்கால மனிதர்கள் கற்கருவிகளை கூர்...