×

கடற்கரையில் பெண்களிடம் அத்துமீறிய வாலிபர்கள்: வீடியோ வைரலால் 4 பேர் மீது வழக்கு பதிவு

புவனகிரி: கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த முத்து, சத்தியமூர்த்தி உள்ளிட்ட 3 குடும்பத்தினர் நேற்று முன்தினம் மாலை புதுச்சத்திரம் அருகே பெரியகுப்பம் கடற்கரைக்கு பொழுதுபோக்கிற்காக வந்துள்ளனர். அவர்களுடன் கலைக்குழு நடத்தும் திருநங்கை ஒருவரும் வந்துள்ளார். இவர்கள் 7 பேரும் கடலில் குளித்துள்ளனர். பின்னர் அங்கு கடற்கரையில் மணலில் நடந்து வந்தபோது அருகில் உள்ள தியாகவல்லி கிராமத்தைச் சேர்ந்த வாலிபர்கள் சிலர் அங்கு வந்த பெண்களிடம் அத்துமீறி உள்ளனர். இதை மற்றவர்கள் தட்டிக் கேட்டபோது இளைஞர்கள் அவர்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கடலூரில் உள்ள வருவாய் அதிகாரிகளுக்கு வீடியோவை அனுப்பி தகவல் தெரிவித்தனர். அதிகாரிகளின் உத்தரவின் பேரில் புதுச்சத்திரம் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தினர். அப்போது சம்பவம் நடந்த இடம் புதுச்சத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதி என தெரிய வந்தது இதையடுத்து புதுச்சத்திரம் போலீசார் தியாகவல்லி கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கவேல் (24), தினேஷ் (21), சரவணன் (22), பிரவீன்(24) ஆகிய 4 பேர் மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதிந்து அவர்களை தேடி வருகின்றனர்.

The post கடற்கரையில் பெண்களிடம் அத்துமீறிய வாலிபர்கள்: வீடியோ வைரலால் 4 பேர் மீது வழக்கு பதிவு appeared first on Dinakaran.

Tags : Muthu ,Sathyamoorthy ,Annanagar ,Kurinjipadi ,Cuddalore district ,Periyakuppam beach ,Puduchattaram ,
× RELATED ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில்...