×

சபரிமலை கோயில் அருகே திடீர் தீ விபத்து

திருவனந்தபுரம்: மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறந்து 30 நாட்கள் ஆகியுள்ளன. இதுவரை 21 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். சபரிமலை கோயிலில் பக்தர்கள் உடைக்கும் தேங்காய்கள் சேகரிக்கப்பட்டு கோயில் அருகே உள்ள கிட்டங்கியில் வைக்கப்படுகிறது. இங்கு தேங்காய் மற்றும் கொப்பரைகள் மலை போல குவிந்து கிடந்தன. இந்நிலையில் நேற்று மாலை 5 மணியளவில் இப்பகுதியில் இருந்து திடீரென புகை வந்தது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை பரவவிடாமல் உடனடியாக அணைத்தனர்.

 

The post சபரிமலை கோயில் அருகே திடீர் தீ விபத்து appeared first on Dinakaran.

Tags : Sabarimala ,Thiruvananthapuram ,Sabarimala Ayyappa temple ,Mandala ,Kal Poojas ,Sabarimala temple ,
× RELATED நடிகர் திலீப் வந்ததால் மற்ற...