×

கன்னியாகுமரியில் கடலில் மிதந்த வடமாநில சுற்றுலா பயணி சடலம்

*போலீசார் தீவிர விசாரணை

கன்னியாகுமரி : சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் நேற்று அதிகாலை சூரிய உதயத்தை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். அப்போது பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் அருகே உள்ள வாவத்துறை கடலில் ஆண் ஒருவரின் சடலம் மிதப்பதை சுற்றுலா பயணிகள் பார்த்தனர். இது குறித்து அவர்கள் கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் கடலோர பாதுகாப்பு குழும இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையிலான போலீசார் வாவத்துறை பகுதிக்கு விரைந்து சென்றனர். இதையடுத்து அங்கு கடலில் துண்டில் வளைவு பகுதியில் மிதந்து கொண்டிருந்த ஆணின் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் சடலமாக மிதந்தவர் வடமாநிலத்தை சேர்ந்த சுற்றுலா பயணி என்பது தெரியவந்தது.

வாவத்துறை கடலில் நேற்று காலை அவர் இறங்கியபோது, தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். இருப்பினும் இறந்தவரின் பெயர் என்ன? அவருடன் வந்தவர்கள் யார்? என்பது குறித்து எந்த தகவலும் உடனடியாக தெரியவில்லை. இது குறித்து கடலோர பாதுகாப்பு குழும போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கன்னியாகுமரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post கன்னியாகுமரியில் கடலில் மிதந்த வடமாநில சுற்றுலா பயணி சடலம் appeared first on Dinakaran.

Tags : North State ,Kanyakumari ,Vavathura sea ,Poombukar Shipping Corporation ,Dinakaran ,
× RELATED கன்னியாகுமரி கடலில் மிதந்த சுற்றுலா பயணி உடல் அடையாளம் தெரிந்தது