×

தமிழகத்தில் கொட்டி தீர்க்கும் கனமழை.. மீண்டும் திறக்கப்படும் சாத்தனூர் அணை: மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!!

திருவண்ணாமலை: சாத்தனூர் அணையில் இருந்து விநாடிக்கு 13,000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. கடந்த நவம்பர் 30ம் தேதி ஃபெஞ்சல் புயல் காரணமாக தென்​பெண்ணை ஆற்றின் நீர்ப்​பிடிப்பு பகுதி​களில் கனமழை கொட்டியது. இதனால் சாத்​தனூர் அணைக்கு நீர்​வரத்து அதிகரிக்கத் தொடங்​கியது. டிசம்பர் 1ம் தேதி காலை விநாடிக்கு 5,000 கன அடியாக இருந்த நீர்​வரத்து நள்ளிரவு ஒரு லட்சம் கன அடியாக அதிகரித்​தது. மறுநாள் அதிகாலை 1.68 லட்சம் கனஅடியாக நீர்​வரத்து உயர்ந்​தது. இதனால், அணையின் நீர்​மட்டம் முழு கொள்​ளளவான 119 அடியை நெருங்கியது. உடனடியாக அணையிலிருந்து உபரி நீர் திறந்துவிடப்பட்டது.

இதனால் திரு​வண்ணா​மலை, கள்ளக்​குறிச்சி, விழுப்பு​ரம், கடலூர் மாவட்​டங்​களில் வெள்ளப் ​பாதிப்பு ஏற்பட்டது. இந்த பிரச்னை ஓரளவு ஓய்ந்திருக்கும் நிலையில் மீண்டும் தமிழகத்தில் கனமழை பெய்ய தொடங்கியுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நகர்ந்து இன்று இலங்கை-தமிழக கடலோரப் பகுதிகளை அடையும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நேற்று இரவு முதல் தொடர் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில், சாத்தனூர் நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சாத்தனூர் அணையில் இருந்து விநாடிக்கு 13,000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. 119 அடி கொண்ட சாத்தனூர் அணையின் நீர்மட்டம் 117.40 அடியை எட்டி உள்ளது சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2,500 கனஅடியில் இருந்து 8,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி தென்பெண்ணை ஆற்றில் விநாடிக்கு 13,000 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது. சாத்தனூர் அணையின் நீர்வரத்துக்கு ஏற்ப நீர் வெளியேற்றம் படிப்படியாக மேலும் அதிகரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தென்பெண்ணையாற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

The post தமிழகத்தில் கொட்டி தீர்க்கும் கனமழை.. மீண்டும் திறக்கப்படும் சாத்தனூர் அணை: மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!! appeared first on Dinakaran.

Tags : Nadu Sattanur Dam ,Thiruvannamalai ,Satanur Dam ,Fengel ,South Women River ,Tamil Nadu Chhattanur Dam ,
× RELATED சாத்தனூர் அணையில் 13,000 கனஅடி நீர் வெளியேற்றம்