- வைரமுத்து
- ரஜினிகாந்த்
- சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- எடப்பாடி பழனிசாமி
- பாஜக
சென்னை : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி அவருக்கு ரசிகர்கள் மற்றும் தலைவர்கள் பலரும் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்,எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக தலைவர் அண்ணாமலை,மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் ரஜினிகாந்த் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அந்த வரிசையில் கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள பதிவில், “வயிற்றில்
தொப்பை சேராத உடலோடும்
தலையில்
கர்வம் சேராத மனதோடும்
அரைநூற்றாண்டாய்
ஒரு நட்சத்திரம்
உச்சத்தில் இருப்பது
அத்துணை எளிதல்ல
ஆனால் இன்னும்
தேயாத கால்களோடு
ஓயாத ஓட்டம்
சூப்பர் நண்பரே!
ஓய்வு குறித்த சிந்தனை
உங்களுக்குண்டா?
தெரியாது
ஆயினும் ஒரு யோசனை
ஓய்வுக்குமுன்
இன்னோர் உச்சம் தொடுங்கள்
அல்லது
இன்னோர் உச்சம் தொட்டபின்
ஓய்வு பெறுங்கள்
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
The post அரைநூற்றாண்டாய் ஒரு நட்சத்திரம் உச்சத்தில் இருப்பது அத்துணை எளிதல்ல : ரஜினிகாந்திற்கு வைரமுத்து பிறந்தநாள் வாழ்த்து!! appeared first on Dinakaran.