×

புதுக்கோட்டை ஆவுடையார்கோவில் அருகே வீட்டில் பிரசவம் பார்த்த நிலையில் பச்சிளம் குழந்தை உயிரிழப்பு!!

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் அபிராமி என்பவருக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்ததில் பச்சிளம் குழந்தை உயிரிழந்தது. புதுக்கோட்டை ஆவுடையார்கோவில் அருகே பெரிய செங்கீரை பகுதியை சேர்ந்தவர் அபிராமி இவர் கணவர் ராஜசேகர். அபிராமிக்கு முதல் பிரசவத்தின் போது குழந்தை பிறந்து இறந்துள்ளது. இதனால் அலோபதி மருத்துவம் மீது அந்த குடும்பம் நம்பிக்கையை இழந்துள்ளனர். பின்னர் ஆபிராம் இரண்டாவது முறையாக கருவுற்று இருந்தார். இதையடுத்து யூ-டியூப் பார்த்து மாமியாரும், கணவரும் சேர்ந்து பெண்ணுக்கு பிரசவம் பார்த்துள்ளனர்.

இதனால் பச்சிளம் குழந்தை உயிரிழந்த விபரீதம் நடந்துள்ளது. தாய் அபிராமிக்கு உடல்நிலை மோசமானதை அடுத்து அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் தகவலறிந்த அறந்தாங்கி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதில், அலோபதி மருத்துவம் மீது நம்பிக்கையில்லாமல் வீட்டிலேயே குடும்பத்தினர் பிரசவம் பார்த்ததாகவும், 2ஆவது கர்ப்பத்தை சுகாதாரத் துறையினரிடம் மறைத்ததாக தகவல் வெளியாகியுள்ளதாக காவல் துறையில் புகார் அளிக்கப்படட்டுள்ளது.

The post புதுக்கோட்டை ஆவுடையார்கோவில் அருகே வீட்டில் பிரசவம் பார்த்த நிலையில் பச்சிளம் குழந்தை உயிரிழப்பு!! appeared first on Dinakaran.

Tags : Pachilam ,Pudukkottai Avudiargo ,Pudukkottai ,Abrami ,Rajasekar ,Greater Senggirai ,Pudukkottai Avudiyargo ,
× RELATED அரசு மருத்துவமனையில் மருத்துவர்...