×

ஆ.ராசாவுக்கு எதிரான வழக்கில் விசாரணையை தொடங்க எதிர்ப்பு தெரிவித்து மனு: அமலாக்கத்துறை பதில் தர சிபிஐ நீதிமன்றம் உத்தரவு

சென்னை: முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஆ.ராசா வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக குற்றம்சாட்டி 2015ல் சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. அந்த வழக்கின் அடிப்படையில், அமலாக்கத் துறை ஆ.ராசா, நண்பர் கிருஷ்ணமூர்த்தி, என்.ரமேஷ், விஜய் சடரங்கனி மற்றும் கோவை ஷெல்டர்ஸ் ப்ரமோட்டர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், மங்கள் டெக் பார்க் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.எழில் வேலவன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, கிருஷ்ணமூர்த்தி, கோவை ஷெல்டர்ஸ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், அமலாக்கத்துறை கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் வரை குற்றச்சாட்டு பதிவு உள்ளிட்ட எந்த நடவடிக்கையும் தொடங்க கூடாது என்று கோரியிருந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவிற்கு பதில் அளிக்குமாறு அமலாக்கதுறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை வரும் 28ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

The post ஆ.ராசாவுக்கு எதிரான வழக்கில் விசாரணையை தொடங்க எதிர்ப்பு தெரிவித்து மனு: அமலாக்கத்துறை பதில் தர சிபிஐ நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Rasa ,CBI ,Chennai ,Minister ,CPI ,Raza ,Department of Enforcement ,A. Rasa ,Krishnamoorthy ,N. RAMESH ,VIJAY SATARANGANI ,KOWAI ,SHELTERS ,INDIA ,Dinakaran ,
× RELATED சென்னையில் வங்கியில் வீட்டுக் கடன் மோசடி: 7 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு