×

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 5 கண்மாய் ஆக்கிரமிப்பை அகற்ற ஐகோர்ட் கிளை உத்தரவு!!

மதுரை: சிவகங்கை மாவட்டம் முத்துவன் திடல் கிராமத்தில் உள்ள 5 கண்மாய் ஆக்கிரமிப்பை அகற்றி விவசாயத்தை பாதுகாக்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் கண்மாய் பகுதியில் ஆக்கிரமிப்பு இருக்கும் பட்சத்தில் முறையாக அளவீடு செய்து 3 மாதத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் முத்துவன் திடலைச் சேர்ந்த கண்ணன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், நீர்வளத்துறைக்கு சொந்தமான கண்மாய் பகுதிகளை சிலர் ஆக்கிரமித்து தென்னை மரங்கள் வைத்துள்ளனர். ஆக்கிரமிப்பால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாக மனுதாரார் குற்றச்சாட்டியுள்ளார்.

The post சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 5 கண்மாய் ஆக்கிரமிப்பை அகற்ற ஐகோர்ட் கிளை உத்தரவு!! appeared first on Dinakaran.

Tags : Icourt ,Madurai ,High Court ,Court ,Muthuan Didal ,Sivaganga District ,District ,Dinakaran ,
× RELATED பள்ளி பாடத்திட்டத்தில் குழந்தைகள்...