×

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி பொய்யான பிரமாண பத்திரம் தாக்கல் செய்த வழக்கு: ஜனவரி 6-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

திருப்பத்தூர்: 2021 சட்டமன்ற தேர்தலில் ஜோலார்பேட்டையில் போட்டியிட்ட கே.சி.வீரமணி பொய்யான பிரமாண பத்திரம் தாக்கல் செய்த வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி திருப்பத்தூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை சட்டப்பேரவை தொகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி 3-வது முறையாக போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

கே.சி.வீரமணி பொய்யான பிரமாண பத்திரம் தாக்கல் செய்ததாக வேலூரைச் சேர்ந்த ராமமூர்த்தி என்பவர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். அதில், தேர்தல் ஆணையத்தில் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி தன் சொத்துகளை குறைத்து தவறான தகவல்களை அளித்திருப்பதாகவும் அவரது வேட்புமனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என தனது புகாரில் தெரிவித்திருந்தார்.

கே.சி.வீரமணி மீது ஆணையம் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்திருந்தார். கே.சி.வீரமணி மீது உரிய நடவடிக்கை எடுக்க தலைமை தேர்தல் அதிகாரிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. விசாரணையில் கே.சி.வீரமணி பிராமண பத்திரத்தை சொத்துக்களை மறைத்தது கண்டுபிடிக்கப்பட்டது.

கே.சி.வீரமணி பொய்யான பிராமண பாத்திரம் தாக்கல் செய்ததாக திருப்பத்தூர் நீதிமன்றத்தில் தேர்தல் அலுவலர் வழக்கு தொடர்ந்தார். மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 125 ஏ பிரிவின் கீழ் நாட்டிலேயே முதன்முறையாக கே.சி.வீரமணி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. நாட்டிலேயே முதன்முறையாக தேர்தல் ஆணையமே வேட்பாளர் மீது வழக்கு தொடர்ந்துள்ளது.

திருப்பத்தூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நவ.26ல் வழக்கு விசாரணைக்கு வந்தபோது கே.சி.வீரமணி ஆஜராகாததால் ஒத்திவைக்கப்பட்டது . இந்நிலையில் இன்று திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜரானார் கே.சி.வீரமணி. வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜனவரி 6ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

The post அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி பொய்யான பிரமாண பத்திரம் தாக்கல் செய்த வழக்கு: ஜனவரி 6-ம் தேதிக்கு ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Tags : Former Minister ,K. C. Veeramani ,Tirupathur ,K. ,Jolarbata ,2021 Assembly elections ,C. Veeramani ,minister ,K. C. Weeramani ,Tirupathur Criminal Court ,Jolarpet Legislative Constituency ,Tirupathur District ,Dinakaran ,
× RELATED கே.சி.வீரமணி இன்று திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜராகிறார்..!!