தன் கண்ணை சிவனுக்கு அளித்த கண்ணப்பரின் பக்தி!

கோவை: பக்தி மார்க்கத்தை பெரும்பான்மையாக கொண்ட இந்த மரபில் பல அடியார்கள் பக்தியில் கரைந்து முக்தி அடைந்திருப்பதாக பல தல வரலாறுகள் உள்ளன. இந்த அடியார்கள் தங்களின் சொந்த வாழ்க்கைக்காகவோ, சாப்பாட்டிற்காகவோ இறைவனை அழைத்ததில்லை. மாறாக, முக்தி வேண்டி, பிறப்பறுக்க வேண்டி என மட்டும்தான் அவர்களின் வேண்டுகோள் இருக்கும். இது அப்படி ஒரு முதிர்ச்சியானதொரு மரபு கொண்ட கலாச்சாரம்.

அத்தகைய மனிதர்களை அடியார்கள், ஆழ்வார்கள், நாயன்மார்கள் என்றழைக்கப்பட்டு அவர்களையும் இறைநிலைக்கு இணையாக வணங்கும் முறை வழக்கத்தில் உள்ளது. அப்படிப்பட்ட ஒரு நாயன்மார்தான் தன் கண்ணையே இறைவனுக்கு வழங்கிய கண்ணப்பநாயனார்.

வேடர் குலத்தில் பிறந்த கண்ணப்பரின் இயற்பெயர் திண்ணன். இவர் வேடர் என்பதால், தான் வேட்டையாடிய மிருகங்களின் மாமிசத்தை சிவலிங்கத்தின் முன் வைத்து மனமுருகி வழிபடும் வாடிக்கையை வைத்திருந்தான். ஒருநாள் கண்ணப்பனின் பக்தியை சோதிக்க விரும்பினான். திண்ணன் தினமும் வணங்கி வந்த சிவலிங்கத்தில், அவன் வணங்கிக் கொண்டிருந்த பொழுது, ஒரு கண்ணிலிருந்து ரத்தம் வடியத் தொடங்கியது.

இதைப்பார்த்ததும் பதறிப் போன கண்ணப்பர், ரத்தத்தை துடைத்துப் பார்த்தார், இருப்பினும் பலனில்லாமல் ரத்தம் வழிந்து கொண்டே இருந்தது. பிறகு, அவரின் கண்ணை எடுத்து இறைவனுக்கு வைக்க முடிவெடுத்து, ஒரு அம்பை எடுத்து தன் ஒரு கண்ணை எடுத்து ரத்தம் வழியும் கண்ணில் வைத்தார். சிறிது நேரத்தில் மற்றொரு கண்ணிலிருந்தும் ரத்தம் வடியத் தொடங்கியது. இதைப் பார்த்து மீண்டும் வாடிப்போன திண்ணன், தன் இன்னொரு கண்ணையும் எடுத்து லிங்கத்திற்கு வைக்க முடிவு செய்தான்.

இதையடுத்து, இரண்டாவது கண்ணையும் எடுத்தால், சிவபெருமானின் ரத்தம் வடியும் கண் மீது வைக்க முடியாது என்பதால், இறைவனிடம் வேண்டிக் கொண்டு, தன் கால் விரலால் சிவலிங்கத்தின் கண் மீது வைத்துக் கொண்டு, மற்றொரு கண்ணை அம்பின் உதவியால் எடுக்க முயன்றான். சிவலிங்கத்திலிருந்து நீண்ட கை, திண்ணனை தடுத்து அப்பா என ஈசன் அழைத்து, திண்ணனை தன் தந்தையாகவே ஏற்றுக் கொண்டார்.

இந்த சம்பவம் நிகழ்ந்த இடம் காளஹஸ்தி திருக்கோயில். இதன் காரணத்தால் இங்குள்ள காளத்தியப்பர், காளத்தீஸ்வரர் என்ற பெயரில் சிவன் அருள் புரிகிறார். இந்த நிகழ்வு நடந்ததாக, கண்ணப்பர் வழிபட்ட சிவ லிங்கம், காளஹஸ்தி மலை மீது இன்று கண்ணில் ரத்தம் வழிவது போன்ற சிவ லிங்கம் காணப்படுகிறது. அருகிலேயே கண்ணப்பரின் சன்னதியும் உள்ளது.

இப்படி நிறைய சிவனடியார்களின் ஜீவசமாதிகளை நமது தென்னிந்தியாவின் பல பகுதிகளில் காணமுடியும். இறைவனின் உறைவிடத்தை கால்களால் மிதிக்கலாகாதென கைலாயத்திற்கு தலையாலும், கைகளாலும் நடந்து சென்ற காரைக்கால் அம்மையார், இறைவனுக்கு உள்ளத்தில் கோயில் எழுப்பிய பூசலார், சிவ அடையாளம் தரித்த யாராயினும் அவரையும் சிவமாகவே கண்டு வணங்கும் மெய்ப்பொருள் நாயனார் உள்ளிட்ட 63 நாயன்மார்கள் வாழ்ந்த புண்ணிய பூமி இது. இத்தகைய ஆன்மீக மண்ணில் இன்றைய சூழலிலும் மக்கள் தங்களது அன்றாட வாழ்வில் இருந்தபடியே சிவனடியாராக இருந்து ஈசனை தொழும் பெரும் வாய்ப்பினை தென்கைலாய பக்திப்பேரவை வழங்குகிறது.

ஒவ்வொரு மாத சிவராத்திரிக்கும் தென்கைலாய பக்திப்பேரவை நடத்தும் சிவாங்கா எனும் யாத்திரை நிகழ்வை நடத்துகின்றனர். இதில் கலந்துகொள்ள பக்தர்கள் 42 நாட்களுக்கு முன்பே பதிவு செய்துகொண்டு தங்கள் விரதத்தை துவக்குகின்றனர். இருவேளை உணவு, சிவநமஸ்காரம் எனும் யோகப்பயிற்சி உள்ளிட்ட செயல்முறைகளோடு மிகத் தீவிரமான பக்தியில் இருக்கின்றனர். ஒவ்வொரு மாத சிவராத்திரிக்கும் இந்த யாத்திரை நடைபெற்றாலும், வருடத்தில் ஒருமுறை வரும் மஹாசிவராத்திரியின் போது இந்த சிவாங்கா யாத்திரை, ஆதியோகி ரத யாத்திரையோடு இணைந்து மிக விமரிசையாக நடைபெறுகிறது.

யாத்திரிகர்கள் 7 மலைத்தொடர்களையுடைய தென்கயிலாயம் என்று அழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலை ஏறி அங்குள்ள சுயம்புவாக வீற்றிருக்கும் ஈசனை கண்டுருகி மலை இறங்குகின்றனர். அதனைத்தொடர்ந்து அன்று இரவு முழுக்க சத்குரு அவர்களின் முன்னிலையில் நிகழும் மஹாசிவராத்திரி நிகழ்விலும் பங்கேற்கின்றனர்.

ஆதியோகி ரத யாத்திரை மகாசிவராத்திரி சமயத்தில் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற ஒரு நிகழ்வாகும். எளிமையான மக்களின் பக்தி எந்த அளவிற்கு தீவிரமெனில்., சென்னை, நாகர்கோயில் உள்ளிட்ட தொலைவான ஊர்களிலிருந்தும்கூட கோவை ஈஷாவில் நடக்கும் மஹாசிவராத்தியில் கலந்துகொள்ள பாதயாத்திரையாக நடந்தே வருகின்றனர். அதிலும் அவர்கள் ஆதியோகி, நாயன்மார்கள் ஆகியோர் கொண்ட ரதங்களை 500 கிலோமீட்டர், 700 கிலோமீட்டர் எனும் அசாத்திய தூரங்களை கடந்து ரதத்தை இழுத்து வருகின்றனர். அவர்களும் அனைவரையும் போல பணி, தொழில் செய்பவர்கள்தான் எனினும், தங்களின் பக்தியின் தீவிரத்தால் உந்தப்பட்டு 20 நாட்களுக்கும் மேலான இப்படிப்பட்ட கடுமையான யாத்திரையை அன்பாக கசிந்துருகி செய்வது மிகுந்த வியப்பை தருகிறது.

சிவாங்கா யாத்திரை குறித்த கூடுதல் தகவல்களுக்கு +9183000 83111 என்ற எண்ணையும், info@shivanga.org என்கிற மின்னஞ்சலையும் தொடர்பு கொள்ளலாம்.

Related Stories: