சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: கேரளத்தைச் சேர்ந்த கத்தோலிக்க கன்னியாஸ்திரிகள் இருவர் சத்தீஸ்கர் மாநிலத்தில் பஜ்ரங் தள் அமைப்பின் பொய்க் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் துன்புறுத்தப்பட்டு, கைது செய்யப்பட்டிருப்பது மிகுந்த கவலையளிக்கிறது. இத்தகைய கும்பல் வன்முறையும், அரசு அதுகுறித்து அமைதி காப்பதும் மதப் பயங்கரவாதத்தின் ஆபத்தான போக்கை வெளிப்படுத்துகிறது. இந்தியாவின் சிறுபான்மையின மக்கள் மாண்போடும் சம உரிமைகளோடும் நடத்தப்பட வேண்டும். மாறாக அவர்களை அச்சுறுத்தக் கூடாது. இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
The post சிறுபான்மையின மக்கள் மாண்போடும் சம உரிமைகளோடும் நடத்தப்பட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பதிவு appeared first on Dinakaran.